தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது? வலுக்கும் கோரிக்கை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது? வலுக்கும் கோரிக்கை
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டும் தாமதமாக தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் பள்ளிகள் ஜனவரி மாதம் முழுவதும் மூடப்பட்டது.
அதன் பின்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனால் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை முடிக்க வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளி வகுப்புகள் நடைபெற்றது. இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனச்சுமையை அதிகப்படுத்தியது. அதனால் நடப்பு கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் கோரிக்கையில், இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளி வேலைநாளாக நடைபெற்றது. இது மாணவர்களுக்கு கூடுதலான மனச்சுமையாக இருந்தது. அதனால் வரும் கல்வியாண்டை வருகிற ஜூன் 20ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும். அத்துடன் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் மற்றும் பாடங்களை குறைக்காமல் முழுவதுமாக நடத்த முன்கூட்டியே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளனர்
No comments