பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். மாத சம்பளம்ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாடங்களை, இந்த ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு, 2012ம் ஆண்டு, 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டது. பின், படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு, 2016 முதல், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை
சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். 'பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., அறிவித்தது.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஒன்பது மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பணி நிரந்தர கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், மாநில தலைவர் சேசுராஜா தலைமையில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுதும் இருந்து வந்துள்ள, ௨,௦௦௦க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என, அறிவித்துள்ளனர். தங்களது பணி நிரந்தர கோரிக்கையை, பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
Post a Comment