தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளுக்கு பிறகு கடந்த 2021 செப்டம்பர் 1ம் தேதி முதல் முதல் கட்டமாக மேல்நிலை வகுப்புகளுக்கு பிறகு 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தொற்று பரவும் அச்சம் காரணமாக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 25 – ஜனவரி 1 வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்தால் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. மீண்டும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்று வந்தனர். அரசு நோய் தடுப்பு பணிகளின் விளைவாக கொரோனா மூன்றாம் அலை ஓய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கையும் ரத்து செய்தது.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது உள்ள தொற்று பரவல் அச்சத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பதற்றமான சூழலை உருவாக்குகிறது. மாணவர்கள் பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்கின்றனர், இதனால் தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளது. தொடர்ந்து 6 நாட்களும் பள்ளிக்கு செல்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் அதனால் சனிக்கிழமை விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
Post a Comment