Breaking : முதுகலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்!.
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
28.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய காலஅட்டவணை வெளியிடப்பட்டது . பார்வை -3 ல் காணும் 27.1.2022 நாளிட்ட கடிதத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் 31.1.2022,09.2.2022 மற்றும் 18.2.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் 61601 தெரிவிக்கப்பட்டிருந்தது . தற்போது பார்வை -3 ல் காணும் 4.2.2022 நாளிட்ட கடிதத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வருகின்ற 10.2.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் திருத்திய காலஅட்டவணையில் அறிவிக்கப்பட்ட 10.2.2022 அன்று நடைபெறவுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு ( PG Deployment counselling ) 09.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கலாகிறது . அதனையடுத்து 11.2.2022 முதல் தொடர்ச்சியாக திட்டமிட்ட காலஅட்டவணைப்படி ஏனை கலந்தாய்வுகள் நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது
Post a Comment