TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?

 TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.


கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5, 413 காலியிடங்களும் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு மே மாதமும், பிரதானத் தோ்வு செப்டம்பரிலும் நடைபெறவுள்ளதாக ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் ஜூனிலும், பிரதானத் தோ்வுக்கான முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும். தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை வரும் 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அன்று முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். 


மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு இனி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கு பதில், காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


இதைத்தொடர்ந்து பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகள் என்ன என்ன பணிகளுக்காக நடத்தப்படுகிறது, எந்த பணிகளுக்கெல்லாம் நேர்முகத்தேர்வு நடைபெறும், யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியாவர்கள், விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து பார்ப்போம். 


எழுத்து தேர்வுடன், நேர்முகத்தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் குரூப் 2 பணியிடங்கள் விவரம்

1. துணை வணிக வரி அதிகாரி

2. நகராட்சி ஆணையர், கிரேடு-II

3. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்

4. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)

5. துணைப் பதிவாளர், கிரேடு-II

6. தொழிலாளர் உதவி ஆய்வாளர்

7. உதவி பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து)

8. உதவி பிரிவு அலுவலர் (சட்டத்துறை)

9. உதவிப் பிரிவு அலுவலர் (நிதித் துறை)

10. உதவிப் பிரிவு அலுவலர் டிஎன்பிஎஸ்சி

11. உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் புரோகிராமர்

12. உதவிப் பிரிவு அலுவலர், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலக சேவை

13. நன்னடத்தை அதிகாரி, சமூக பாதுகாப்பு

14. நன்னடத்தை அதிகாரி, சிறைத்துறை

15. தொழில் கூட்டுறவு அலுவலர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்

16. பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்புத் துறை

17. துணை ஆய்வாளர் சர்வே இயக்குனர் மற்றும் குடியேற்றங்கள் பிரிவு

18. கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்

19.வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, உதகமண்டலம்

20. தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை

21. திட்ட உதவியாளர், ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

22. இந்து சமய தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர் மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத் துறை

23. உள்ளூர் நிதி தணிக்கை துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கை துறை

24. மேற்பார்வையாளர், மூத்த எழுத்தர், தலைமை கணக்காளர், இளநிலை கண்காணிப்பாளர் தமிழ்நாடு வேளாண்மை துறை 

25. உதவி செய்லர், சிறைத்துறை

26. வருவாய்த் துறையில் உதவியாளர்

27. நிர்வாக அலுவலர், டவுன் பஞ்சாயத்துகள் துறையில் கிரேடு-II

28. டிவிஏசி இல் சிறப்பு உதவியாளர்

29. கைத்தறி ஆய்வாளர்

30. காவல் துறையின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர்.

31. பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால்வள மேம்பாடு

32. தொழிலாளர் உதவி ஆய்வாளர்

33. நெடுஞ்சாலைத் துறையில் கணக்குக் கிளையில் தணிக்கை உதவியாளர் போன்ற துறைகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


நேர்முகத் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படும் 2ஏ​ பணியிடங்கள் விவரம் : 

1. கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் கணக்காளர்

2. இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்

3. தலைமை செயலகத்தில் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து)

4. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், பொது விநியோக துறை

5. நேர்முக எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறையைத் தவிர்த்து)

6. நேர்முக எழுத்தர் (சட்டத்துறை)

7. நேர்முக எழுத்தர் (நிதித்துறை)

8. தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் நேர்முக எழுத்தர்

9. நேர்முக எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு

10. சுருக்கெழுத்தர்-தட்டச்சர், தமிழ்நாடு தலைமை செயலக சேவை பல்வேறு துறைகள்.

11. வருவாய் நிர்வாகம், தொழில்துறை ஆணையர் மற்றும் வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள், பதிவு, போக்குவரத்து, சிறை, காவல், உணவு பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, நில நிர்வாகம், நில சீர்திருத்தங்கள், மீன்வளம், பொதுப்பணித்துறை, தொழில்நுட்பக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, வணிக வரிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம், காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, வனம், எச்.ஆர் மற்றும் சி.இ., சமூக பாதுகாப்பு, என்சிசி., கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு துறை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, பள்ளிக் கல்வி போன்ற துறைகளில் உதவியாளர் பணியிடங்கள்.

12. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தலைமை செயலகத் துறையில் உதவியாளர் (நிதித் துறை) 

13. உதவியாளர், டிஎன்பிஎஸ்சி

14. கடைநிலை பிரிவு எழுத்தர், தலைமை செயலகம்

15.  இளநிலை உதவியாளர், திட்டமிடல் துறை போன்ற துறைகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படாமல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்ன?  

குரூப் 2 தேவை எழுத விரும்புவோர், ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


சம்பளம்: மாதம் ரூ.37,200 - 1,17,600 வழங்கப்படும்.


வயது வரம்பு உயா்வு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பாக 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தோ்வுகள் நடத்தப்படாத நிலையில், தோ்வினை எழுதுவோருக்கான வயது வரம்பு 30-லிருந்து 32-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, அருந்ததியர்கள், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து சமூகத்தை சேர்ந்த விதவைகள் போன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. 


தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் அனைத்து பணியிடங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணங்களையும் ஆன்லைனிலே செலுத்த வேண்டும். 


தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?  ஜூன் மாதம் வெளியிடப்படும். முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும், கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் டிசம்பர் 2022 - 2023 ஜனவரி மாதங்களில் நடைபெறும். முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.  


குரூப் 2 தேர்வுகள் விவரம்: குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர். 


குரூப் 2ஏ தேர்வுகள் விவரம்: குரூப் 2ஏ தேர்வில் முதல்நிலைத் தேர்வும் முதன்மைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு இருக்காது.  


முதல்நிலைத் தேர்வு என்பது கொள்குறி வகையைச் சேர்ந்ததாகவும், முதன்மைத் தேர்வு என்பது விரிவான எழுத்துத் தேர்வாகவும் இருக்கும். 


இந்தத் தோ்வுக்கு சுமாா் 9 லட்சம் போ் விண்ணப்பம் செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 1:10 என்ற அடிப்படையில் பிரதானத் தோ்வுக்கு தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். அதன்படி, 65 முதல் 70,000 பேர் பிரதானத் தோ்வு எழுத அனுமதிக்கப்படலாம். 

 

கேள்விகள் மற்றும் மதிப்பெண்கள் விவரம்: 

  தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பிரிவுகளில் இந்தத் தேர்வினை எழுதலாம். குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்படி, தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழிக்கான தகுதித் தேர்வாக இருக்கும். மற்ற 100 கேள்விகளில் பொது அறிவியல் பிரிவில் இருந்து 75 மதிப்பெண்களுக்கும்,  நுண்ணறிவு பிரிவில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 


ஆங்கிலத்தில் தேர்வெழுதுவோருக்கு 300 மதிப்பெண்களுக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும், நுண்ணறிவு பிரிவில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு குறைவாக பெறுவோர் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்கப்படுவர்.


தேர்வு நேரம் மாற்றம்: தோ்வாணையத்தின் போட்டித் தோ்வுகள் எப்போதும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த நேர நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடையும். மாலையில் நடைபெறும் தோ்வுகளுக்கான நேரத்தில் எந்த மாற்றமும் இன்றி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.


2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு குரூப் 2 தோ்வுகள் நடத்தப்படாத நிலையில், குரூப் 2 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

Post a Comment

Previous Post Next Post