பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - SPD வெளியீடு.

பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - SPD வெளியீடு.

.

2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகையை (Composite School Grant) மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்.


EMIS Portal- லில் நிதித் தொகுதியில் மாற்றங்கள் : 


1. பெறப்பட்ட மொத்தத் தொகையில் 1/5 வரை ரொக்கமாக செலவழிக்கலாம்.

2. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் இன்று வரை வருமானத்தைப் பதிவிடலாம் . தொகை , கணக்குத் தலைப்பு அல்லது தேதியில் பிழை ஏற்பட்டால் , இந்தத்தகவலைத் திருத்தலாம்.

3. வாங்கிய தேதியிலிருந்து 7 நாட்கள் வரை பள்ளிகள் தங்கள் விலைப்பட்டியலை பதிவேற்றலாம் . ஒரு முறை பதிவேற்றிய விலைப்பட்டியலைத் திருத்த இயலாது . விலைப்பட்டியல் விவரங்கள் தவறாக இருந்தால் , விலைப்பட்டியல் நீக்கப்பட்டலாம் மற்றும் புதிய விலைப் பட்டியலை பதிவிடலாம்.

4. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் கொள்முதலுக்கான விலைப்பட்டியலைப் பதிவேற்றலாம் . தற்போதைய தேதியின் படி ஏழு நாட்களுக்கு முன்புள்ள செலவினங்களைப் பதிவு செய்ய AAM ( Audit & Accounts Management ) இன் ஒப்புதலை Invoice பெறுதல் அவசியம் . அதுவரை , விலைப்பட்டியல் நிலுவையில் உள்ளதாகக் குறிக்கப்படும்.

5. போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் , AAM விலைப்பட்டியலை ( குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே ) , குறிப்புகளுடன் நிராகரிக்கலாம் . பள்ளிகள் இந்த விலைப் பட்டியலை நீக்கலாம் மேலும் AAM யின் கருத்துகளுக்கு ஏற்ப பதிய ஒன்றை பதிவேற்றலாம்.

6. பள்ளிகள் செலவினத்தையும் தேதியையும் மட்டும் திருத்தலாம் . எனினும் , கணக்குத் தலைப்பைத் திருத்த முடியாது . இது போன்ற பதிவிடலில் , பள்ளி செலவினத்துடன் இணைக்கப்பட்ட விலைப்பட்டியலை நீக்கி விட்டு புதிய ஒன்றை பதிவேற்றலாம் . பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்ட அளவில் தொகுத்து ( தொடக்க நிலை / இடைநிலை தனித்தனியாக ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் மாநில திட்ட இயக்ககத்திற்கு 10.04.2022 -- க்குள் தவறாமல் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கையொப்பமிடப்பட்டது அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :

Post a Comment

Previous Post Next Post