உபரி பேராசிரியர்கள் பணிக்காலம் - உயர்கல்வித்துறை புதிய உத்தரவு.
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்கள் பணி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிக அளவிலான துணை பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து உபரியாக இருந்த 370 துணை பேராசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக நிதிநிலை சரியில்லாததால், மாற்றப்பட்ட 370 உபரி துணை பேராசிரியர்களை, தற்போது மீண்டும் திரும்பப்பெற முடியாது என்று உயர்கல்வித்துறைக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது.
Post a Comment