இன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு!
.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதலுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், பிப்ரவரியில் துவங்கியது. முதற்கட்டமாக, 'எமிஸ்' என்ற பள்ளி கல்வி மேலாண்மை தளத்தை பயன்படுத்தி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த தளத்தில் ஆசிரியர்களின் தகவல்களை பதிவு செய்வது மற்றும் அவற்றை பார்ப்பதில், ஏராளமான தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன.
இதையடுத்து, தனித்தனியே தினமும் காலியிடங்களை பதிவு செய்து, அந்த பட்டியலின்படி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதனால், கவுன்சிலிங் தாமதமாக நடந்து வருகிறது. கடந்த வாரமே கவுன்சிலிங் முடியவிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கவுன்சிலிங் இன்னும் முடியவில்லை.இறுதி கட்ட கவுன்சிலிங் இன்று காலை 8:30 மணிக்கு துவங்க உள்ளது. இதில், 6,000 பட்டதாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மூன்று நாட்களில் கவுன்சிலிங் முடிய வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Post a Comment