SSLC Regular Students Nominal Roll Downloading and Correction Related Proceedings by DGE!
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
மே -2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் அவரவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெயர் பட்டியலை ( Nominal Roll ) 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்ய கால அவகாசமும் , 20.01.2022 முதல் 05.02.2022 வரை கூடுதலாக கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
இதன்படி தயாரிக்கப்பட்ட மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 10.03.2022 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in- க்கு சென்று தங்கள் பள்ளிக்கென வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் , பெயர் பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் ( பெயர் , பிறந்த தேதி , தாய் , தந்தை / பாதுகாவலர் பெயர் , புகைப்படம் ) அத்திருத்தங்களை 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ளவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2021 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் ( Nominal Roll ) சேர்க்காமல் விடுபட்டிருப்பின் பெயர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment