200க்கும் அதிகமான வட மாநிலத்தவர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர முயற்சி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் உறுதி செய்தது.
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை.
தமிழகத் தேர்வுத் துறை அளித்ததுபோல, போலி மதிப்பெண் சான்றிதழை வழங்கிப் பணியில் சேர முயற்சித்ததாகக் கூறி வட மாநிலத்தவர்கள் சிக்கியுள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் சேர, வட மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை பரிந்துரை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 200-க்கும் அதிகமானோர் இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே தமிழகக் கல்வித் துறையில் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் இந்திய அஞ்சல் துறை, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு நிறுவனங்களில் சேர, சான்றிதழ் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக ஏராளமான வட மாநிலத்தவர் தமிழகத்தில் உள்ள ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளின் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் இந்த மோசடிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, தேர்வுத் துறை பரிந்துரை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment