இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு கோடை விடுமுறை மற்றும் கோடை விடுமுறையில் தன்னார்வலர் களுக்கான பணிகள் :
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கவனத்திற்கு....
இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு கோடை விடுமுறை மற்றும் கோடை விடுமுறையில் தன்னார்வலர்களுக்கான பணிகள் :
📍 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அறிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.
📍இந்நிலையில் விடுமுறையில் மையத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து Telegram App மூலமாக நமது இ.தே.க சிறப்பு அலுவலர் நடத்திய வாக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் இருந்து கலந்த கொண்டு வாக்களித்த தன்னார்வலர்களின் கருத்தின்படி கோடை விடுமுறையில் மையங்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி , கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் மையங்களுக்கு வர விரும்பினால் பெற்றோர்களின் ஒப்புதலை பெற்று தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவித்துவிட்டு மையங்களை நடத்தலாம்.
📍மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு விளையாட்டு, கதைகள் , பாடல்கள் , போன்றவற்றோடு வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
📍எதிர் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய சிறப்பு முயற்சிகள் குறித்து தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுடன் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க உதவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் , பள்ளி மேலாண்மைக்குழுக்களுக்கும் மாவட்ட அளவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.
விடுமுறை குறித்த தகவல் :
📍விடுமுறை தேவைப்படும் தன்னார்வலர்களுக்கு மட்டும் தன்னார்வலர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 14.5.2022 முதல் 31.5.2022 விடுமுறை வழங்கப்படுகிறது. தாங்கள் விடுமுறையில் செல்லும் நாட்கள் குறித்த விவரத்தினை மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தெரிவிக்க வேண்டும். இக்காலங்களில் தன்னார்வலர்கள் ஆன்லைன் வருகைப் பதிவு செய்யத் தேவையில்லை.
📍 ஜூன் முதல் வாரத்தில் தன்னார்வலர்களுக்கு இணைய வழி பயிற்சி மற்றும் வட்டார அளவில் தன்னார்வலர்களுக்குள் இணைய வழி கலந்துரையாடல் நடைபெறும்.
📍ஜுன் 13 முதல் பள்ளிகள் திறந்ததும் வழக்கம்போல் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படும்
Post a Comment