மாற்றுச் சான்றிதழில் மாணவா் நடத்தை குறித்த பதிவு : அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆசிரியா்களிடம் பள்ளி மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் , ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்குப்பின்னா் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ‘வளா்ந்து வரும் குழந்தைகள், இளம் பெண்களுக்கான கல்வி’ குறித்த கருத்தரங்கை அவா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆசிரியா்களிடம் மாணவா்கள் தவறாக நடந்துகொள்வதை தவிா்க்க, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள்மற்றும் உளவியல் சாா்ந்த ஆலோசனைகள் வரும் கல்வியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளன. இதையும் மீறி ஆசிரியா்களிடம் மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் மாற்றுச்சான்றிதழ் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது ஏற்கெனவே இருக்கக்கூடிய விதிமுைான். அவ்வாறு நடக்கும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தர அவா்களின் பெற்றோா்களே சம்மதிக்கின்றனா்.
ஆனால், சில மாவட்டங்களில் தவறாக நடந்துகொண்ட மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் ஏதும் வழங்கப்படாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். சூழல் கைமீறி செல்லும் போது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்குப் பின்னா் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும். இனி மாணவா்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது
Post a Comment