ஒரத்தநாடு அருகில் ஜூனியர் ரெட் கிராஸ் தொடக்க விழா மற்றும். அறக்கட்டளை மூலம் 38 மாணவர்களுக்கு இலவச ஜெஆர்சி சீருடை வழங்குதல்
.
ஜூனியர் ரெட் கிராஸ் தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச ஜெஆர்சி சீருடை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த கூட்டம். தஞ்சாவூர் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆழியவாய்க்கால் நத்தம் பள்ளியில் ஜே.ஆர்.சி தொடக்க விழா நடைபெற்றது விழாவில் மாணவர் தலைவர் ராகவி அனைவரையும் வரவேற்றார் விழா தலைமை ஆசிரியர் திரு கே ஏ லியோ தாமஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விழாவில் 38 மாணவர்களுக்கு தனுவர்ஷன் அறக்கட்டளையின் சார்பாக ஜெ.ஆர்.சி சீருடை வழங்கப்பட்டது ஜெ ஆர் சி ஆலோசகர் திரு.தமிழ்வாணன் அவர்கள் மாணவர்களுக்கு ஜே.ஆர்.சி நோக்கம் அடிப்படை கொள்கைகள், குறிக்கோள், சேவைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார் விழாவில் கணித மன்ற பொறுப்பாளர் திரு. திருமுருகன் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் திரு. ராஜராஜ சோழன் சாரண சாரணியர் பொறுப்பாளர் திரு. ஜார்ஜ் புஷ்பராஜ் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர் திரு. அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர் விழாவின் இறுதியில் மாணவர் துணைத் தலைவர் குணாழினி அவர்கள் நன்றி கூறினார்.
Post a Comment