தஞ்சையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி JRC ஆசிரியர்களுக்கான ஒருநாள் சிறப்பு பயிற்சி முகாம்
.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி JRC ஆசிரியர்களுக்கான இந்நிகழ்வு பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 06.07.23 வியாழக்கிழமை துவங்கியது. இந்நிகழ்வின் துவக்க நிகழ்வான கொடியேற்றுதல் நிகழ்வை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா பிரமிளா பூரணி கொடியேற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வானது தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதல் படியும், மாவட்ட க்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையின் படியும் இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் பள்ளியில் பணி புரியும் 💯 JRC கவுன்சிலர் ஆசிரிய பெருமக்களுக்கு மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி அவசர காலங்களில் எவ்வாறு முதலுதவி செய்வது, பள்ளிகளில் எவ்விதமான போட்டி திறன் வளர்க்கும் நிகழ்வுகளை நடத்துவது போன்ற விஷயங்களை பயிற்சிகள் மூலம் அனுபவமிக்க வல்லுனர்களால் பயிற்சி வழங்கப்பட்டன. இதில் பங்குபெற்ற கவுன்சிலர்கள் பெருமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்வு நிறைவாக மாலை நேரத்தில் கொடி பாடல் JRC கவுன்சிலர்களால் பாடல் பாடப்பெற்று கொடி இறக்கப்பட்டது.
Post a Comment