பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா

 பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா.



ஜெனிவா ஒப்பந்த நாள் விழா ஜூனியர் ரெட் கிராஸ் மூலமாக  தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதல் படியும்  மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) கோவிந்தராஜ்  , மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) அமலா தங்கத்தாய்,மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி ) அய்யா கண்ணு ஆகியோரின் அறிவுரையின்படியும் 25.08.23அன்று  ஜெனிவா ஒப்பந்தம் நாள் விழா பூதலூர் ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி கொடியேற்றி விழாவில் முன்னிலை வகித்து விழாவினை துவக்கி வைத்தார்.நிகழ்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்ட JRC அமைப்பாளர் பிச்சைமணி ஹென்றி டுனான்ட் படத்தினை திறந்து வைத்து ஜெனிவா ஒப்பந்தம் நாள் விழா பற்றி சிறப்புரை ஆற்றினார்.விழாவின் துவக்கத்தில் ஒன்றிய அமைப்பாளர் சாஹேப் சாதிபேகம் வரவேற்புரையாற்றினார்.மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகளான கட்டுரை போட்டி பேச்சுபோட்டி, நடனம் , ஓவியம், வினாடி வினா என போட்டிகள் 6முதல் 8, 9முதல்10 வரை தனித்தனியாக நடைப்பெற்றது.இப்போடீடியில் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகள்/ உதவிபெறும் பள்ளிகள்,/மெட்ரிக் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 500 JRC மாணவர்கள் மற்றும் JRC  கவுன்சிலர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக ரம்யா சத்தியநாதன் கல்லூரியின் தாளாளர்  சத்தியநாதன் , இக்கல்லூரியின் முதல்வர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவிற்கு பரிசுப்பொருட்கள் வழங்க உதவி செய்து மாணவர்களுக்கு எதிர்கால சிந்தனையை தூண்டும் வகையில் சிறப்புரையாற்றினார்.மேலும்  திருக்காட்டுப்பள்ளி லயன்ஸ் கிளப்பின் மூலம் மதியம் அறுசுவை உணவு வழங்கிய குணா சாசனத்தலைவர், கிருஷ்ணமூர்த்தி தலைவர், ஜெயந்த் அற்புதராஜ் செயலாளர், வஜ்ரவேலு பொருளாளர் ஆகியோர் பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கி பாராட்டினார்கள். சானூரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார் மற்றும் பூதலூர் ஒன்றிய மெட்ரிக் பள்ளிகள் விழாவிற்கு மேலும் உறுதுணையாக இருந்தனர். இப்பள்ளியின் JRC ஒன்றிய அமைப்பாளர் ஜெயபாலன் விழாவில் போட்டிகள் நடத்த உறுதுணையாக இருந்தார்.தஞ்சாவூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ்மாறன் இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார். இறுதியாக தஞ்சாவூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.



















Post a Comment

Previous Post Next Post