5 Things to Remember While Filing Income Tax Return

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது மறக்கக் கூடாத 5 விஷயங்கள்.


வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது மறக்கக் கூடாத 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்

மாத ஊதியத்துக்கு வரி செலுத்துவோர், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது சில முக்கிய காரணிகளை கவனித்தால் தேவையற்ற அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கலாம்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வோர், தேவையான ஆவணங்களை தேடி எடுத்து வைக்க வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

பொதுவாகவே, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது, அவ்வேலையை மிகவும் எளிதாக்கிவிடும்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் முன், நமது ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை மீண்டும் உறுதி செய்து கொள்ளலாம்.

அதனோடு, உங்கள் வரித் தொகை திரும்பப் பெறுவதற்கான வங்கிக் கணக்கு தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா அல்லது ஏதேனும் பிரச்னையால் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளலாம்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, மிகச் சரியான படிவத்தைத்தான் பூர்த்திசெய்கிறீர்களா? தவறான படிவத்தை தேர்வு செய்துவிட்டால் அது வீணாகிவிடும், மீண்டும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டியது ஏற்படலாம்.

தனிநபர்கள் தங்களது ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் வருமான வரி ரிட்டன்-1 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.


இந்தியர்கள் அல்லாதவர்கள், ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், சூதாட்டம் போன்றவற்றின் மூலம் வருவாய் ஈட்டுவோர், பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் லாபம் ஈட்டுதல், பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்யும்போது, ஒரு வீட்டைத் தவிர பல சொத்துகளிலிருந்து வருவாய் ஈட்டும்போதும் அவர்கள் ஐடிஆர் - 1 படிவத்தை பூர்த்தி செய்ய முடியாது.

மேலும், பான் எண், வீட்டு முகவரி, தொடர்பு எண், வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post