தஞ்சாவூர் மாவட்ட ஜெனிவா ஒப்பந்த நாள் விழா .
பள்ளிக்கல்வித்துறை தஞ்சாவூர் மாவட்டம்-
பூதலூர் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் (அரசு / உதவிப்பெரும்/ நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை/ மெட்ரிக் /சிபிஎஸ்இ) அனைத்து பள்ளிகளிலும் வழக்கமாக ஜெனிவா ஒப்பந்த நாள் விழா -JRC சார்பில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. இரா.மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ,மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி ) திரு M.கோவிந்தராஜ் அவர்களும் ,மாவட்டக் (தொடக்கக் கல்வி)கல்வி அலுவலர் திரு மா.அய்யாக்கண்ணு அவர்களும் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு. வை.சாரதி ஆகியோர்களின் அறிவுரைகளின் படியும் 30.08.2024 வெள்ளிக்கிழமை, ஜெனிவா ஒப்பந்த நாள் விழா செங்கிப்பட்டி ஶ்ரீ திவ்யா மேற்கொண்டார் மெட்ரிக் பள்ளி,செங்கிப்பட்டியில் நடைபெற்றது . இவ்விழாவில் ஜே. ஆர்.சி கொடியினை பள்ளியின் தாளாளர் திருமதி.நா.கஸ்தூரி.அவர்கள் கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் ஜுன் ஹென்றி டூணான்ட் படத்தை திறந்து வைத்து கருத்துரை வழங்கினார். முன்னதாக ஜே. ஆர். சி மேல்நிலைப் பள்ளிகள் இணை ஒருங்கிணைப்பாளர் திரு K.பாலமுருகன் அவர்கள் வரவேற்று பேசினார். தஞ்சை மாவட்ட ஜே. ஆர். சி அமைப்பாளர் திரு A.பிச்சைமணி அவர்கள் மாணவர்களுக்கு ஜெனிவா ஒப்பந்த நாள் விழா பற்றிய விழா பேருரையாற்றினார். மேலும் மண்டலத் தலைவர் திரு. Lion.V.K.திருநாவுக்கரசு,துணைத்தலைவர் ,PTA தலைவர் திரு.இளவரசன் , திருமதி.சுகன்யா காளிமுத்து, மாவட்ட இணை செயலாளர் திரு.Lion .K.R.சரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் லயன்ஸ் சங்கம் தலைவர் Dr.மாரிமுத்து, செயலாளர் சங்கீதா,பொருளாளர் அறிவழகன், தஞ்சாவூர் விக்டரி லயன்ஸ் சங்கம் தலைவர் ஜெய்கீதா, செயலாளர் சுபா சரவணன், பொருளாளர் அய்யனார் ஆகியோர் இணைந்து பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வின் மாலை பொழுதில் போதைத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை திரு. உதவி காவல் ஆய்வாளர் பாரதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைக்க, செங்கிப்பட்டி முக்கிய சாலைகளின் வழியாக வந்து பேரணி நடைபெற்றது. JRC இணை ஒருங்கிணைப்பாளர் திரு.J. ஜேசுதாஸ் தமிழ்மாறன் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவின் முடிவில் JRC ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சாஹெப் சாதி பேகம் அவர்கள் நன்றி கூற, இவ்விழா இனிதே நிறைவுற்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
Post a Comment