தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா.
தஞ்சாவூர் மாவட்டம்,
ஒரத்தநாடு ஒன்றியம்
ஜெனிவா ஒப்பந்த நாள் விழா (JRC). ஜே ஆர் சி மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒரத்தநாட்டில் 22.8. 2024 புதன்கிழமை நடைபெற்றது . இவ்விழாவில் ஜே. ஆர்.சி கொடியினை பள்ளி தலைமை ஆசிரியர் திரு V.செந்தமிழ் செல்வன் அவர்கள் கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் திருமதி கா.லதா ,திருமதி சே.வகிதா ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றி கருத்துரை வழங்கினார்கள். ஜீன் ஹென்றி டூணான்ட் படத்தை வட்டார கல்வி அலுவலர் திரு. க.தமிழ்வாணன் அவர்கள் திறந்து வைத்து கருத்துரை வழங்கினார். முன்னதாக ஜே. ஆர். சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு அ.தமிழ்வாணன் அவர்கள் வரவேற்று பேசினார். தஞ்சை மாவட்ட ஜே. ஆர். சி அமைப்பாளர் திரு A.பிச்சைமணி அவர்கள் மாணவர்களுக்கு ஜெனிவா ஒப்பந்த நாள் விழா பற்றிய விழா பேருரையாற்றினார். ஜெனிவா ஒப்பந்த நாள் விழா தகவல் குறிப்பேட்டை ஒரத்தநாடு ஐ ஆர் சி எஸ் செயலர் திரு எஸ் வேந்திரன் அவர்கள் வெளியிட இணை கன்வினர் திருமதி ஜி செல்வராணி அவர்கள் ஜே ஆர் சி மாணவர்களுக்கான குரு தகவல் கையேடு திரு பிச்சைமணி மாவட்ட கன்வீனர் அவர்கள் வெளியிட பொருளாளர் திரு. ராமதாஸ் பெற்றுக் கொண்டார்.ஒரத்தநாடு தலைமை மருத்துவர்.M. தேவேந்திரன் தலைமையிலான மருத்துவ குழு மாணவர்களுக்கு உடல்நலம், சுகாதாரம், போதை தடுப்பு விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் கருத்துரை வழங்கினர் மேலும் கை கழுவுதல் முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தமிழ்நாடு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகுழு நிலைய அலுவலர் பொறுப்பு திரு. செல்வம் தலைமையிலான குழுவினால் செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மேலும்
மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி சுண்டல் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் தயிர் சாதம் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவரா பட்டு R வீரராகவன் தொழிலதிபர் சிங்கப்பூர் அவர்களால் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஜே ஆர் சி ஆலோசகர்களுககும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் சார்பாக அவர்களுடைய சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு கோ. நாகேந்திரன் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் ஜே ஆர் சி ஆலோசகர்கள் அனைவரையும் பாராட்டி அவர்களுடைய சேவைக்காக நினைவு பரிசையும் வழங்கினார். இந்நிகழ்வின் மாலை பொழுதில் அமைதி பேரணியை IRCS தலைவர் V.நாராயணசாமி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைக்க, ஒரத்தநாடு நகர அணைத்து வீதிகளின் வழியாக வந்து பேரணி நடைபெற்றது.பேரணியின் முடிவில் பேரூராட்சி தலைவர் திரு. மா. சேகர் அவர்கள் நிரைவுரையாற்றினார்.
மேலும் 700 மாணவ மாணவிகளுக்கும் முத்தம்பள் இல்ல முன்னாள் மாணவர்கள்மரக் கன்றுகள் மற்றும் சார்பாக Water Bottle வழங்கப்பட்டது. பொய்யுண்டார்கோட்டை கு. செல்வேந்திரன் (ஜப்பான், எஸ் கே எஸ் கார்ப்பரேஷன்) சார்பாக பென்சில், ரப்பர், ஸ்கேல், எரேசர், வழங்கப்பட்டது ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் V.செந்தமிழ்ச்செல்வன் சார்பாக பென்சில் மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவர் திரு.மா. சேகர் அவர்களால் குளிர்பானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட இணை அமைப்பாளர் திருமதி G.செல்வ ராணி அவர்கள் மற்றும் IRCS செயலர் திரு.S.சுரேந்திரன்,திரு.R.ராமதாஸ், திரு. த.செல்வம் ஆகியோர்கள் மற்றும் JRC இவ்விழா சிறக்க ஏற்பாடு செய்தனர். விழாவின் முடிவில் நடுநிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு ந.ரெகுபதி அவர்கள் நன்றி கூற, இவ்விழா இனிதே நிறைவுற்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
Post a Comment